2 எரிவாயு கப்பல்களுக்கான கட்டணங்களை செலுத்த அரசாங்கம் நடவடிக்கை

கொழும்பு,மே 16

செவ்வாய்க்கிழமை(17) இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இரண்டு எரிவாயு கப்பல்களுக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவியுள்ள எரிபொருள் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்பதோடு, மக்கள்  எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் காஞ்சன விஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை 4 இலட்சம் மெட்ரிக்டொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *