
இந்தியா,மே 16
இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூரணை தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்திற்கு செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் Sher Bahadur Deuba ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதன் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட இருதரப்பு கூட்டுறவு பகுதிகளை மேம்படுத்துதல் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலே, இரு தரப்பு கலந்துரையாடல்களின் பின்னர் கலாசாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளின் ஒத்துழைப்புக்கான ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

