யாழ்.திருநெல்வேலியில் கோர விபத்து: 3 பேர் பலி

யாழ்ப்பாணம்,மே 18

யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் இருவர் மற்றும் அதில் பயணத்த மற்றுமொருவர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

17, 23 மற்றும் 25 வயதுகளையுடைய சுன்னாகம், கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் கவனயீனமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *