போருக்கு ஆதரவான சின்னம் அணிந்ததற்காக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு தடை!

பதக்கம் வழங்கும் மேடையில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ஆதரவான சின்னத்தை அணிந்ததற்காக ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீரருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் கட்டாரில் நடந்த ஒரு நிகழ்வில் வெண்கல பதக்கத்தை பெற்றுக்கொள்ளும் போது ரஷ்ய வீரர் தனது உடையில் “Z” என்ற சின்னத்தை பொறித்திருந்தார்.

பதக்கம் பெறும் மேடையில் தங்கப் பதக்கம் வென்ற உக்ரேனிய வீரர் அவர் அருகில் நின்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் உள்ள ரஷ்ய போர் வண்டிகள் மற்றும் வாகனங்களில் Z என வர்ணம் பூசப்பட்டு, போருக்கு ரஷ்யர்களால் அணியப்படுகிறது.

இந்நிலையில் ஜிம்னாஸ்டிக்ஸ் நெறிமுறைகளை 20 வயதான குறித்த வீரர் மீறியுள்ளதாக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

அத்தோடு அவர் பெற்றுக்கொண்ட பதக்கத்தையும் பரிசுத் தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்றும் ஆனால் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *