
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.
அரசாங்கத்தை விலகக்கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தன்னெழுச்சியாக மக்கள் முன்னெடுத்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்கியதையடுத்து பிரதமர் பதவி விலகினார்.
பிரதமர் பதவி விலகியதிலிருந்து இன்று வரை அவர் நாடாளுமன்றத்துக்கு செல்லவில்லை. மக்களின் ஆர்ப்பாட்டத்துக்கு, மக்களின் கேள்விகளுக்கு முகங்கொடுக்க முடியாத இக்கட்டான சூழலில் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்புக்காக தங்கியிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை நேற்று பிரதிசபாநயகரைத் தெரிவு செய்யவதற்காக நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆனால் அங்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அவரது மகனான அமைச்சர் நாமல் ராஜபக்சவும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

