உக்ரைனுக்கு ஹெல்மெட், பாதுகாப்பு அங்கிகளை வழங்கியது இஸ்ரேல்!

உக்ரைனில் உள்ள அவசர மற்றும் சிவிலியன் அமைப்புகளுக்காக 2,000 ஹெல்மெட்கள் மற்றும் 500 பாதுகாப்பு அங்கிகளை வழங்கியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.

கடந்த மாதம் ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்குவதாக பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் கூறினார்.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கியூவ்வில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற உபகரணங்களை வழங்குவதில் இஸ்ரேலின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *