அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம்: பிரதமர்

கொழும்பு, மே 19

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்பதுடன், சில சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அலுவலக செலவுகளை பாதியாக குறைக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *