நாடாளுமன்றில் சஜித்துக்கு நன்றி தெரிவித்த ரணில்!

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வின்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறைகளை நீக்கும் முகமாக நேற்று நாடாளுமன்றில் ரணில் விக்கிரமசிங்க, விடுத்த கோரிக்கைக்கு அமைய, இரண்டு முக்கிய மருந்துகளை பெற்று தருவதற்கு தமது கட்சி இணங்குவதாக சஜித் பிரேமதாச, இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

இதனையடுத்தே ரணில், சஜித்துக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தநிலையில் இந்த மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உள்ள நிர்வாக சிக்கல்களை நீக்குமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

இந்த மருந்துக்களை பெற்றுக்கொள்ள ரூபாய்கள் உள்ளபோதும் டொலர்கள் தேவை என்ற பிரச்சினை இருக்கிறது.

எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் மூலம் இந்த டொர்களை பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, வெளிநாடுகளில் உள்ள துாதரகங்கள் ஊடாக இதனை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அதற்கான பணிப்புரைகளை தாம் துாதரகங்களுக்கு விடுப்பதாகவும் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *