சுகாதார ஊழியர்களின் சம்பளக் குறைப்பு தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!

சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே குறித்த சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் சுகாதார ஊழியர்களுக்கான சம்பளம் குறைப்புக்கு தயாராகி வருகின்றது அரசு.

எனவே அவ்வாறான சம்பள குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுமாயின் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அதுவரை சுகாதார அமைச்சுக்கு கால அவகாசம் அளித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *