ஜகத் சமரவிக்ரம நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்!

ஜகத் சமரவிக்ரம நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலொன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply