அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 21 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11 மணியளவில் மட்டக்களப்பு – கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 ஆண்களும் 04 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் பயணிக்க பயன்படுத்திய 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *