நாளை முதல் ஜூன் 6 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறை!

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடைகின்றது.

இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

பரீட்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *