இன்றும் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் குறித்த பதவிப் பிரமாணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரசாங்கத்துடன் இணைந்த ஏனைய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இதுவரை நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *