17 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்துடனும், 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களில் இவர்கள் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கணவர் டுபாயில் இருப்பதாகவும், அவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவருகிறது.
அத்துடன் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

