
வாகனங்களின் எரிபொருள் நிரப்பு தாங்கிக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று வாகனங்களின் தாங்கிகளுக்கு மாத்திரமே வழங்கப்படும்.
எமது எரிபொருள் நிலையங்களில் கொள்கலன்கள், பரல்கள் மற்றும் போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படமாட்டாது.
பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என லங்கா ஐ.ஓ.சி மேலும் தெரிவித்துள்ளது.

