பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள்

கொழும்பு, மே 20

கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சை கடமைகளில்  ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்  எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பரீட்சை கடமைகளில்  ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு  எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியில் முன்னுரிமை அடிப்ப்டையில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.  

இதேவேளை,  பொலிஸ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏனைய வாகனங்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான அனுமதி தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *