
பாராளுமன்ற அமர்வு இன்றையதினம் காலை10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமானது.
இன்றைய சபை அமர்வில் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே கருத்து தெரிவிக்கையில்.
நாட்டில் 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்துக்கு நாமே காரணம் என இங்கே பலர் குற்றம் சாட்டுகின்றனர்.இதில் இப்போது உண்மைகள் பல வெளிவந்துள்ளன.கலவர இடத்தில பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 8 பேர் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள்.ஏனையவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்.
அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது.ஆகவே நேர்மையானர்களாக நீங்கள் இருந்தால் வன்முறையில் ஈடுபட்ட உங்கள் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குங்கள் என்றார்.

