கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் மஹிந்த கெளரவமான பிரியாவிடையை இழந்துள்ளார் – மஹிந்தானந்த

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது கெளரவமான பிரியாவிடையை இழந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், “1977ல் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. எனது தந்தை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மூன்று முறை எங்கள் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். எனக்கு 6 வயது இருக்கும்போது நாங்கள் வாரக்கணக்கில் காட்டில் ஒளிந்திருந்தோம்.

தலைவரின் பிரியாவிடை நமது கண்ணுக்கு தெரியாத சக்தியால் பேராசையின் துரதிர்ஷ்டவசமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் கண்ணியத்துடன் விடைபெறும் முறையை இது மாற்றியது. மஹிந்த ராஜபக்ஷ போன்ற கௌரவமான தலைவர் இப்படியொரு பிரியாவிடையை  எதிர்பார்த்திருக்க முடியாது.

இந்த நெருக்கடியைப் பற்றி பேசினோம். கேட்கவில்லை. செவிடான யானைக்கு வீணை வாசிப்பது போல் இருந்தது.

காலிமுகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் வீடுகள் எரிப்பு குறித்து தனி விசாரணை வேண்டும். இந்த மோசடி அரசியலை நிறுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *