
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சகோதரன் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய தாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 20 வயதான இளைஞர் ஒருவரை இளவாலைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தை பகுதியில் கடந்த மாதம் 24ஆம் திகதி தனது கணவன் வெளியில் சென்ற நிலையில் வீட்டுக்கு வந்த சகோதரன்ம்துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குறித்த சந்தேக நபரின் சகோதரி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட இளவாலைப் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்ததோடு குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் குறித்த சகோதரி மந்திகை மனநல மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

