மாகாணங்களுக்கிடையிலான தடை இரு வாரங்களுக்கு நீடிப்பு?

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவர் அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சிகை அலங்கார நிலையங்கள், பார்கள், இரவு விடுதிகள் ஆகியன ஒரு மாதத்துக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கிடையில் இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படாது எனவும், மாகாணத்துக்குள்தான் சேவைகள் இடம்பெறும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply