யாழை சேர்ந்த 5 இளைஞர்கள் கம்பகாவில் ஆயுதங்களுடன் கைது; பின்னணியை தேடும் பொலிஸார்!

யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சந்தேகத்திற்கு இடமான வகையில் கூரிய கத்தி மற்றும் முகமூடிகளுடன் கம்பகாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 20 தொடக்கம் 27 வரையான வயதை உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கம்பகா மாவட்டத்தில் அத்தனகல்ல பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பணிபுரிந்துள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட டிஐஜி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைத்த தகவலின் படி, அத்தனகல்லாவில் உள்ள குறித்த நிறுவனத்திற்குள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில், நான்கு தொடக்கம் எட்டு வரையிலான அங்குலம் உடைய கத்திகள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலை அடையாளம் வகிக்கும் வகையிலான முகமூடிகள் குறித்த இளைஞர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே குறித்த ஐந்து இளைஞர்களும் கைது செய்யப்ட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், அவர்களின் தனிப்பட்ட அறைகளை சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் முகமூடிகள் கிடைத்தன.

மேலும், ஐந்து நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் ஆண்டு தினத்தை குறித்த இளைஞர்கள் கேக் வெட்டி விருந்து நடத்தியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 பேர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அவர்கள் யாரைப் பின்பற்றுபவர்கள் என்பது குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply