மே 9 வன்முறை சம்பவம்: 827 முறைப்பாடுகள், 1220 சந்தேகநபர்கள் கைது

கொழும்பு,மே 20

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வியாழக்கிழமை 22 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதற்கமைய இது வரையில் ஒட்டு மொத்தமாக 827 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதற்கமைய நேற்று மாத்திரம் 161 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 80 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 90 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 1220 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 540 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 570 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *