அதிக விலைக்கு எரிபொருள் விற்ற பெண் கைது!

புத்தளம் – தில்லையடி பகுதியில் பெண்ணொருவர் பெற்றோல் ஒரு லீற்றர் 600 ரூபாவிற்கு விற்பனை செய்து வந்தாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய இன்று மாலை பெண்ணின் வீட்டில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 லீற்றர் டீசல் மற்றும் 9 லீற்றர் பெற்றோல் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது குறித்த பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், குறித்த பெண்ணையும் கைப்பற்றப்பட்ட எரிபொருளையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *