எரிபொருள் இருப்புக்கள் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய செயலியினை உருவாக்க நடவடிக்கை

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்த தகவல்களை வழங்கக்கூடிய செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10 நாட்களுக்குள் குறித்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் எரிபொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்களை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *