சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது Rajasthan Royals

ஐ.பி.எல் தொடரின் 68வது போட்டியில் Rajasthan Royals அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

Rajasthan Royals மற்றும் Chennai Super Kings அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Chennai Super Kings அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Chennai Super Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மொய்ன் அலி அதிகபட்சமாக 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 151 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய Rajasthan Royals அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்று 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

Rajasthan Royals அணி சார்பில் ஆட்டமிழப்பின்றி 40 ஓட்;டங்களை பெற்றுக்கொடுத்த அஸ்வின், போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தெரிவானார்.

இந்த வெற்றியுடன் Rajasthan Royals அணி புள்ளிபட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *