கனடாவிலும் உறுதி செய்யப்பட்டது குரங்கு அம்மை தொற்று

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றானது கனடாவிலும் முதன் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 20 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு இருப்பவர்களிக்கே இது பரவும் வாய்ப்புகள் அதிகம் எனவும் விளக்கமளித்துள்ளனர்.

இதனிடையே, 17 பேரிடம் குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றமையினை, மாண்ட்ரீல் பொது சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *