சீனாவின் சேதனப் பசளையை இறக்குமதி செய்வதை இன்னும் நிறுத்தப்படவில்லை எனவும், தீங்கு விளைவிக்கும் பக்டீரியா கொண்ட பசளையை தயாரிக்கும் சீன நிறுவனத்தில் இருந்து மாத்திரமே பசளை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் விவசாய அமைச்சரின் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவிலிருந்து சேதன பசளைகளை இறக்குமதி செய்வதை நிறுத்தப்படும் என்று விவசாய அமைச்சர் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சீனாவில் இருந்து சேதன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், விவசாய அமைச்சரால் இது போன்ற ஒரு அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பக்டீரியா பசளை உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மாத்திரமே பசளை இறக்குமதி நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.