மே09 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மகிந்த எடுத்துள்ள தீர்மானம்!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு போரி நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *