பெற்றோல், டீசல் விலை மீண்டும் உயர்வு?

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனடிப்படையில், அடுத்தவாரமளவில் பெற்றோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கப்படலாம் என தெரியவருகிறது.

கடந்த ஜூன் 11 ஆம் திகதியே இறுதியாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. எனினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஓகஸ்ட் 31 ஆம் திகதியில் இருந்து 70 பில்லியன் டொலர் நட்டமாகி வருவதாக தெரியவருகின்றது.

மேலும், டொலர் நெருக்கடி மற்றும் பல காரணிகளை கூறி அரசாங்கம் விரைவில் எரிபொருள் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Leave a Reply