தோல் நோய் களிம்பு வகைகள் தீர்ந்த நிலையில் வெளிநாடு வாழ் தனி நபர் அன்பளிப்பு

யாழ், மே 21

 யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தோல் நோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான களிம்பு(Ointments)வகைகள் தீர்ந்து போன நிலையில் அவற்றை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்து நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக அவுஸ்திரேலியாவில் வதியும் நாரந்தனையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை விஜயநாதன் என்பவர் அவற்றை வழங்கி உதவியுள்ளார்.தனியார் மருந்தகங்கள் இல்லாத தீவகப் பகுதியில் இவ்வாறான பரோபகார உதவிகள் நோயாளர்களுக்கு பேருதவியாக அமையும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *