யாழில் வாள்களுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், அச்சுவேலிப் பகுதியில் வாள்களுடன் ஒருவர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நபர் வாள்களை வைத்திருப்பதுமன்றி, அக்கிராமத்தில் பல வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்திருந்தார். அண்மையிலும் வாள்களைக் கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டி கலவரத்தில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரியவருகின்றது.

இவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்திருந்தார்.

யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த வீடு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கூரிய வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டமையுடன்,; இந் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்;கொண்டு வருகின்றனர்.

Leave a Reply