இனஅழிப்பு தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் நிலைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது! – வி.மணிவண்ணன்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பாக கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்து. இச் செய்தி, சர்வதேச நீதி கோரிய தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தோம். இந்த பயணமானது எமக்கு ஒரு ஆக்கபூர்வமான ஒரு சுற்றுப்பயணமாக இருந்தது.

நோர்வே, சுவிசிலாந்து, பிரான்ஸ் போன்ற 20க்கும் மேற்றப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் மாநகர முதல்வர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செனட் சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தோம்.

யாழ்ப்பாண மாநகர சபைக்கும் நல்லூர் பிரதேச சபைக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர்.

பிரான்ஸ் உள்ளுராட்சிகளில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், தமிழ் மக்களுடைய தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடாத்திய பொழுது, ஏற்கனவே தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு என்ற விடயத்தை தாம் ஏற்றுக் கொள்வதாக அங்கு அந்தந்த உள்ளுராட்சிகளில் தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டிருந்தன. அந்த வகையில் பிரான்ஸ் பாராளுமன்றத்திலும் இது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

நோர்வேயில் உள்ள சி.எம்.ஐ நிறுவனத்திற்கு விஜயம் செய்திருந்தோம். அந்த நிறுவனம் 1990 பிற்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தை ஆய்வினை மேற்கொண்டு, சமாதானத்தை மேற்கொள்ளவதற்காக முயற்சியை எடுத்திருந்தனர்.

இதன் விளைவாக சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டன. இந்த சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்விகள், இன்றும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாமைக்கான காரணங்கள் மற்றும் அதன் தேவைப்பாடுகள் குறித்து கருத்துக்கள் முன்வைத்தோம்.

எதிர்வரும் மாதங்களில் இதற்கான ஆய்வுகள் மீண்டும் நடத்த எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார்கள். இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் அழைக்கப்பட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்திருக்கின்றேன். இந்த நகர்வானது சாத்தியமாக அமையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.- எனவும் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *