
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் வண்டியொன்று திடீர் என தீப்பற்றி எரிந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதிலும் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றுமுழுதாக தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
பெற்றோல் கசிவினாலேயே குறித்த தீப்பற்றல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

