மாலைதீவு சபாநாயகருடன் சஜித் திடீர் சந்திப்பு!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களை இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பின் போது இருதரப்பு அடிப்படையிலும் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக மாலைதீவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்புறவு பற்றியும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

அத்தோடு தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலவரம் தொடர்பில் பேசப்பட்டதுடன் இலங்கையின் முன்நோக்கிய பயணத்திற்கு மாலைதீவினால் வழங்கப்படும் நட்பு ரீதியான ஆதரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் அவரது நன்றியைத் தெரியப்படுத்தினார்.

குறிப்பாக, இலங்கை மற்றும் மாலத்தீவு இடையே நீண்டகால நட்புறவு உட்பட பல பரஸ்பர விருப்பம் சார்ந்த விஷயங்கள் கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *