நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் ஜீப் ஒன்றுடன் தொடருந்து மோதுண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

