எரிவாயு தொடர்பில் கேள்வியெழுப்பிய மஹிந்த!

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிவாயு தட்டுப்பாடும் மக்களை வாட்டி வதைக்கின்றது.

சில மாதங்களுக்குள் 4 தடவைகள் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்ட போதும் எரிவாயுவை பெற்றுக்கொள்வதில் பல்வேறு இடர்களை சந்தித்து வருகின்றனர்.

இதேவேளை எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள உணவகங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த தேசப்பிரிய எரிவாயு விநியோகம் தொடர்பில் தனது முகநூலில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

பாணதுர களுதர பெருவல, பலபிட்டி, அம்பலங்கொட, ஹிக்கடு, ரத்கம, காலி, மாத்தற நகரங்களுக்கும் எரிவாயு தேவை என்பது காப் குழுவுக்கு தெரியாதா? என்றவாறாக கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *