
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த 6ஆம் திகதி நடைமுறைப்படுத்திய அவசரகாலச் சட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் செயலிழந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி பிறப்பித்திருந்தார்.
இந்த அவசரகாலச் சட்டத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே நீடிக்கும் என்ற நிலையில் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து 14 நாள்களுக்குள் நாடாளுமன்ற அனுமதியை பெற வேண்டும்.
எனினும் இம்முறை அந்த அனுமதி பெறப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் அவசரகாலச் சட்டம் காலாவதியாகியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

