நாளை முதல் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்!

சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து வைப்பவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை முதல் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெற்றோல் மற்றும் டீசலை சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்துபவர்கள் மற்றும் மீள் விற்பனை செய்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *