மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட்டுக்கும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில் நாமல் அவரது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மாலைதீவு நாடுகளாக மட்டுமல்ல, மக்களாக ஒரு சிறந்த நட்பை எங்களிடம் பகிர்ந்து கொள்கின்றன. கடினமான காலங்களில் நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் துணை நின்றிருக்கிறோம்.

எங்கள் சார்பாக சர்வதேச சமூகத்தை அணுகி, நிவாரணத்தை ஒருங்கிணைத்து, இலங்கைக்கு உதவ வருவதற்கு, கௌரவ சபாநாயகர் மொஹமட் நஷீட் அவர்களுக்கு நன்றி.- எனப் பதிவிட்டுள்ளார்.

