
நாட்டின் பல இடங்களிலும் கடந்த சில வாரங்களாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் யாழில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அவர் பனடோல் உட்கொண்டுவிட்டு இருந்துள்ளார் . எனினும் 19 ஆம் திகதி மீண்டும் வயிற்றோட்டம் வாந்தி ஏற்பட்டு மாணவன் பாதிக்கப்பட்டுள்ளார் . இதன் காரணமாக அவர் நேற்று யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் .
இதேவேளை டெங்கு காய்ச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் என்ற 11வயதுடைய என்ற யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் என தெரிவிக்கப்படுகிறது.

