கெரவலப்பிட்டியில் உள்ள யுகதனவி மின்நிலையத்தில் 40% பங்குகளை வாங்கிய அமெரிக்க நிறுவனமானது, நியூயோர்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 350 டொலர் மில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை பெற்றுள்ள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்,
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மிகவும் பலவீனமாக அழிந்து போகும் நிலையில் இருக்கும் அமெரிக்கா நிறுவனத்திற்கு, யுகதனவி மின்நிலையத்தில் 40 % பங்குகளை வழங்குவது குறித்து அரசாங்கம் விளக்கம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நஷ்டமடைந்துள்ள நிலையில் இருக்கும் அமெரிக்கா நிறுவனத்திற்கு மின் நிலைய பங்கினை வழங்கி அரசாங்கம் மேலும் நஷ்டமடைய போகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்