திருகோணமலையில் 770 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

திருகோணமலை,மே 22

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரை திருகோணமலை மாவட்டத்தில் 770 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெங்கு வீரியமிக்க உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை, கிண்ணியா, மூதூர், உப்புவெளி, குச்சவெளி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *