யாழ்ப்பாணம்,மே 22
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி, ஈபிடிபி அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள திறந்தவெளி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் அதிகாலை தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுக்கடங்காமல் குறித்த கடை முழுவதும் பரவி பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் கருகியுள்ளன.
இன்று அதிகாலை 2.30 மணிளவில் விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி கடை முழுவதும் பரவி முழுமையான சேதத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாநகர சபை தீயணைப்பு படை முயற்சிகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


