ஜப்பானுடனான இலகு ரயில் திட்டத்திற்கு முன்னுரிமையில்லை – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

ஜப்பானுடனான இலகு ரயில் போக்குவரத்தை (LRT) புனரமைக்க இலங்கை முயற்சிக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியது.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

“இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை, இலங்கையில் நிலைமை சீராகும் வரை அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்பில்லை.

தற்போது தீர்க்க எங்களுக்கு இன்னும் அழுத்தமான பிரச்சினைகள் உள்ளன. உணவு நெருக்கடி உருவாகி வருகிறது, எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றை நாங்கள் வழங்க வேண்டும்.

உள்கட்டமைப்பு திட்டங்கள் தற்போதைய முன்னுரிமை பட்டியலில் அதிகமாக இல்லையெனவும்” அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *