வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்!

வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல் வழங்கப்படவுள்ளது.

சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி கடவுச்சீட்டு, ஜூலை மாதம் அயர்லாந்து குடியரசில் நடைமுறைக்கு வந்தது.

இந்தநிலையில், டிஜிட்டல் கொவிட் சான்றிதல் அணுக வடக்கு அயர்லாந்தில் உள்ளவர்கள், தற்போது ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வடக்கு அயர்லாந்தில் உள்ள பெரும்பாலான ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் குடியரசிற்கு வெளியே தடுப்பூசி போடப்பட்டதால் சான்றிதழை அணுக முடியவில்லை.

இந்த நடவடிக்கை இரண்டு கட்ட அணுகுமுறையின் முதல் முறை என்று ஐரிஷ் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்டத்தின் போது, வடக்கு அயர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்ட கடவுச்சீட்டு வைத்திருக்கும் ஐரிஷ் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை போர்டல் ஏற்றுக்கொள்ளும்.

அவர்கள் சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட க்யுஆர். குறியீட்டைக் கொண்ட கொவிட் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்கிறார்கள்.

Leave a Reply