திருகோணமலை – கிண்ணியா பகுதியில் உள்ள எழிலரங்கு மைதானத்தில் எரிவாயு விநியோகமானது இன்று இடம்பெற்றது.
மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல மணி நேரங்கள் காத்திருந்த போதும் பலர் வெருங்கையுடன் வீடு திரும்பியதால் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இன்று சிலருக்கு எரிவாயு கிடைக்கப்பெறவில்லை, வெயிலில் பல மணி நேரங்கள் காத்திருந்தது மட்டுமே மிகுதி.
இதனை நம்பி இருந்த போதிலும், எரிவாயு கிடைக்கவில்லை இதனால் ஏமாற்றமடைந்துள்ளோம், வீடுகளில் சமைப்பதற்கு கூட எரிவாயு இல்லை, என எரிவாயுக்காக காத்திருந்த தாய் ஒருவர் தெரிவித்தார்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் என பலர் எரிவாயுவை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




