கைது செய்யப்பட்ட 16 வயது மாணவனுக்கு பரீட்சை எழுத அனுமதி

ஏறாவூர்,மே 22

ஏறாவூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம், வீடு உறவினரின் வீடு ஹோட்டல், போன்றவற்றுக்கு தீ வைத்தமை மற்றும் ஆடைத்தொழிற்சாலை உடைத்து சோதப்படுத்திய சம்பவம் தொடர்பாக  மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் சனிக்கிழமை (21) வரை 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த (10) ஆம்திகதி இரவு  நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு அவரது உறவினரின் வீடு, ஹோட்டல் என்பன தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் 3 ஆடைத் தொழிற்சாலைகள் சேதமாக்கப்பட்டன.

இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சிறுவனை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் க.பொ.தர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள சிறுவனை பரீட்சை நிலையத்துக்கு அழைத்துச் சென்று பரீட்சை எழுத அனுமதிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *