யாழில் 2ஆம் சங்கிலிய மன்னனின் 403 ஆவது சிரார்த்த நிகழ்வு

யாழ்ப்பாணம்,மே 22

யாழில் இன்றைய தினம் தமிழ் மக்கள் போற்றுகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாண இராசதானியின் இறுதி மன்னனான 2ஆம் சங்கிலிய மன்னனின் 403 ஆவது சிரார்த்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில், 2ஆம் சங்கிலிய மன்னனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, நாதஸ்வர வாத்தியங்களுடன் ஊர்வலமாக யமுனா ஏரிக்கு சென்று அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறவன்புல சச்சிதானந்த குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *