மீண்டும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த நாடாளுமன்ற அங்கீகாரம் அவசியம்! – பேராசிரியர் தகவல்

எதிர்வரும் ஒரு மாதக் காலப்பகுதிக்குள் மீண்டும் அவசர கால நிலையை ஜனாதிபதி, பிரகடனப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் ஆ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதியினால் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

அதனை அமுல்படுத்தி 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், குறித்த காலப்பகுதியில் நாடாளுமன்றில் அது நிறைவேற்றப்படாத காரணத்தினால், கடந்த 20ஆம் திகதியுடன் இரத்தாகியுள்ளது.

இந்த நிலையில், ஒரு மாதக்காலப்பகுதிக்குள் அவசர கால நிலையை ஜனாதிபதி, மீண்டும் பிரகடனப்படுத்துவதானால் நாடாளுமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என கொழும்பு பல்கலைகழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் ஆ.சர்வேஸ்வரன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *