மன்னாரில் இடம்பெற்ற வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான விசேட செயலமர்வு

இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

தேசிய சமாதான பேரவையின் பிரதிநிதியான அமில மதுஷங்கவின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட தொடர்பாடலுக்கான மையத்தின் (CCT) இணைப்பாளர் யசோதரன் தலைமையில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இச்செயலமர்வு நடைபெற்றுள்ளது.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை கெல்விட்டாஸ்க் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் மாவட்ட ரீதியில் உள்ள இளைஞர்கள், சர்வமத குழு உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களை உள்ளடக்கி மேற்படி செயலமர்வு இடம்பெற்றது.

பிரதேச ரீதியாக ஏற்படும் பிரிவினைகள், வன்முறை தீவிரவாத செயற்பாடுகளை நோக்கி நகர்வதைத் தடுக்கும் நோக்கிலும், பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் இயங்கி வரும் சிவில் சமூக குழுக்களின் தீவிரவாதத்திற்கு எதிரான செயல் திறன்களை மேம்படுத்தும் விதமாகக் குறித்த செயலமர்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.

குறித்த செயல் திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இலங்கையில் இன ரீதியான முரண்பாடுகள் அதிகம் காணப்படும் ஆறு மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டு அப் பகுதிகளில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *